நிம்மதியா சாப்பிட விடுங்கடா.. மனுசர – Viral Video!!!!
வாழை இலையில் வைக்க இடம் இல்லாமல் பக்கத்து இலையை கடன் வாங்கும் அளவுக்கு உணவுகளை அடுக்கும் ஊர்களும் உண்டு.
Photography ஒரு அழகான கலை. இளமை காலத்தின் பசுமையான நினைவுகளை மீட்டெடுக்க இந்த புகைப்படங்களும், வீடியோக்களும் உதவுகின்றன. இதுபோன்று புகைப்படங்கள் எடுக்கும்போது சில சங்கடங்களும் ஏற்படுவது உண்டு.
திருமணம் போன்ற விஷேச நிகழ்வுகளுக்கு புகைப்படக் கலைஞர்களை அழைத்து போட்டோ, வீடியோக்களை எடுக்கின்றனர்.
பொதுவாகவிசேஷங்கள் என்றாலே சாப்பாடு பிரதானமானது. ஒவ்வொரு நாட்டுக்கும் , ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் உணவு இருக்கும். அவர்களுக்கென ஒரு பாரம்பர்யம் இருக்கும்.
வாழை இலையில் வைக்க இடம் இல்லாமல் பக்கத்து இலையை கடன் வாங்கும் அளவுக்கு உணவுகளை அடுக்கும் ஊர்களும் உண்டு.
விசேஷ நிகழ்வுக்கு வரும் ஒரு சில புகைப்படக்காரர்கள் இயல்பாக போட்டோ எடுக்கிறேன் என்ற பெயரில் சாப்பிடும் இடத்திற்கு Cameraவுடன் ஆஜராகிவிடுவார்கள்.
எதோ தூரத்தில் இருந்து எடுத்தால் கூட பரவாயில்லை. நேராக முகத்துக்கு முன்பாக கேமராவுடன் ஆஜராகிவிடுவார்கள்.
நன்றாக ருசித்து சாப்பிடும்போது இப்படி வந்த நம்மை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்குவார்கள்.
மெல்லவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் தவிக்கும் அந்த தவிப்பு இருக்கே. இப்படியான ஒரு சூழலில் இளம்பெண் ஒருவர் சிக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பளபளக்கும் புடவையும் ஜொலிக்கும் நகையும் முழங்கை வரை வரிசைக்கட்டிய வளையல்களுடன் காட்சியளிக்கும் இளம்பெண் ஒருவர் மிகவும் ஆர்வமாக உணவு எடுத்துக்கொண்டிருந்தார்.
கைகளில் எடுத்த உணவை வாய் அருகே கொண்டு சென்றபோது அருகில் யாரோ இருப்பதை உணர்ந்து திரும்பி பார்க்கிறார்.
அந்த நிகழ்ச்சிக்கு வந்த புகைப்படக்காரர் அந்த பெண்ணின் அருகே கேமரா வைத்து வீடியோ எடுப்பதை கவனித்தும் ஒரு நிமிடம் அவரது முகமே மாறிவிட்டது.
விடியோவை பார்வையிட இங்கே Click செய்யவும்.
கைகளில் இருந்த உணவு ப்ளேட்டுக்கு சென்றது. கண்கள் கதகளி ஆட தொடங்கிவிட்டது. உடனே ஸ்பூனில் சாப்பிடத் தொடங்கிவிட்டார். இவை அனைத்தையும் அருகில் இருந்த மற்றொரு நபர் செல்போனில் படம்பிடித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.