நிவர் புயலால் சேதமடைந்த பிரபல இயக்குனரின் கார்
தற்போது உருவாகியிருக்கும் நிவர் புயல் காற்றால் பிரபல இயக்குனர் ஒருவரின் கார் மீது மரம் விழுந்து சேதம் அடைந்துள்ளது.
தற்போது உருவாகி இருக்கும் நிவர் புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.
சாலைகளில் அதிக அளவில் தேங்கியிருக்கும் தண்ணீர் ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளது. ஒருபுறம் காற்று வேகமாக வீசுவதால் மரங்களும் சாய்ந்து வருகின்றன. இதனால் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் பெரிதும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில் கண்டேன் காதலை, வந்தான் வென்றான், பிஸ்கோத் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் கண்ணன், வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது கார் மீது மரம் விழுந்ததில் காரின் முன் பக்கம் சேதமடைந்துள்ளது.