அத்தியாவசிய பொருட்களுக்கு வரி இல்லை….. 97 பொருட்களுக்கு புதிய வற் வரி – எரிபொருளுக்கு விசேட வரிகள்!!

அடுத்தவருடம் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு வரி விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வற் திருத்தச் சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மருந்துகள், ஊனமுற்றோர் உபகரணங்கள், அரிசி, கோதுமை மா, மரக்கறிகள், பழங்கள், பால் மற்றும் அம்புலன்ஸ் சேவைகளுக்கு வற் வரி(Vat Tax) அறவிடப்படாது.

97 பொருட்களுக்கு புதிய வற் வரி விதிப்பதன் மூலம் நாட்டின் பணவீக்கம்(Inflation) இரண்டு சதவீதம் அதிகரிக்கலாம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *