இலங்கைக்கு நிதி வழங்க உலக வங்கி திடடமிடவில்லை….. இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர்!!
போதுமான பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பை உருவாக்கும் வரை,
இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை என உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஃபரிஸ் எச். ஹடாட்-ஜெர்வோஸ்(Faris H. Hadad-Zervos) குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையொன்றை வெளியிட்ட அவர் குறித்த அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வங்கியானது இலங்கையின் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளதுடன்,
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பரந்த அடிப்படையிலான வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான பொருத்தமான கொள்கைகளுக்கு ஆலோசனை வழங்குவதில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற அபிவிருத்தி பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை,
உலக வங்கி இலங்கைக்கு நிதியுதவி வழங்க உறுதியளித்துள்ளது என வெளியான வெளிவிவகார அம்மைச்சியின் செய்தியும் குறித்த அறிக்கையில் மறுக்கப்பட்டுள்ளது.
“உலக வங்கியானது இலங்கைக்கு புதிய கடன் உறுதிப்பாட்டுடன் ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய ஊடக அறிக்கைகள் தவறாகக் கூறியுள்ளன” என இது தொடர்பில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த மாதங்களில் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை உலக வங்கி இலங்கைக்கு வழங்கும் என கொழும்பில் உள்ள உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் சியோ காந்தா உறுதியளித்துள்ளதாக இன்று காலை செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும்,
இந்த செய்தியை உலக வங்கி தற்பொழுது மறுத்துள்ளது சுட்டிக்காட்டத்தக்க உண்மை.