யாழ் – மாதகல் பகுதியில் 150 KG கஞ்சா மீட்பு….. எவரும் கைது செய்யப்படவில்லை!!
யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 150 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்த கஞ்சா தொகையை நேற்றிரவு(28/03/2023) கடற்படையினர் மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை,
குறித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த கஞ்சா கடத்தல் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சா சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.