ஜனவரி 03 முதல் மூடப்படுகிறது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!!
நாட்டில் சுத்திகரிப்புக்கான கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் ஜனவரி 3ஆம் திகதி முதல் மூடப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வரலாற்றில் முதல் தடவையாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை மூடப்பட்டது.
இது குறித்து எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் எம்.எஸ்.ஓல்காவிடம் சிங்கள ஊடகமொன்று கேட்டபோது ஜனவரி 25ம் திகதிக்கு பிறகு ஒரு சரக்கு கச்சா எண்ணெய் கப்பல் இலங்கைக்கு வர உள்ளதாகவும், அதுவரை சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டி வரலாம் என்றும் கூறினார்.