நவம்பர் 4-ந் தேதி வெளியாகவுள்ள “அண்ணாத்த”!!
‘அண்ணாத்த’ படத்தை வரும் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. கிராம பின்னணிக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி ‘அண்ணாத்த’ திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், அண்ணாத்த படத்தின் First Look Poster விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ளனர்.