விமானத்தில் சென்ற இலங்கை காவல் துறையில் பணியாற்றிய அதிகாரி….. தன்னை படகு மூலம் அகதியாக வந்ததாக பதிவு செய்யும் முயற்சியில் கைது!!

இலங்கையில் இருந்து விமானத்தில் இந்தியா சென்ற இலங்கையர் அகதியாக பதிவு செய்ய படகில் வந்ததாக கூறி நாடகம் இந்தியாவின் தனுஷ்கோடியில் இடம்பெற்றுள்ளது

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் தீடை பகுதியில் இலங்கை திருகோணமலை பகுதியைச் சேர்ந்த தினேஷ்காந்த என்பவர் தஞ்சம் அடைந்துள்ளதாக மரைன் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து,

அப்பகுதிக்கு விரைந்து சென்ற மரைன் காவல்துறையினர் அவரை மீட்டு விசாரணைக்காக மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணான பதில் கூறி வந்ததோடு அவர் இலங்கையிலிருந்து தமிழகத்தில் அகதியாக தஞ்சமடைய வந்தாரா?

அல்லது தமிழகத்தில் இருந்து இலங்கைக்குச் செல்ல தனுஷ்கோடி தீடை பகுதிக்கு சென்றாரா?

அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக தீடை பகுதிக்கு சென்றாரா?

என பல்வேறு கோணங்களில் மரைன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில்,

தனுஷ்கோடி அடுத்த தீடை பகுதியில் கடல் பகுதியில் கடல் நீரில் நனைந்த படியே தஞ்சம் அடைந்தால் அகதியாக வந்து இருக்கிறார் என்று காவல்துறையினர் அழைத்து சென்று மண்டபம் அகதிகள் முகாமில் அடைத்து விடுவார்கள் என்ற நோக்கத்தோடு தீடை பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இதையடுத்து,

மரைன், கியூ பிரான்ச் போலீசாரின், மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையில் அவர் விசா மூலம் இலங்கை கொழும்பில் இருந்து சென்னை வந்து பின்னர் அங்கிருந்து மதுரை வந்தடைந்து இன்று காலை ராமேஸ்வரம் வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

 

தற்போது அவரை முழு விசாரணை நடத்தியதில் விசா மூலம் வந்தது உறுதியானதை அடுத்து அவருடைய விசாவின் கால அவகாசம் இன்னும் 90 நாட்கள் உள்ளது.

இந்த நிலையில்,

மத்திய புலனாய்வுத் துறையினர் இலங்கையில் இருந்து விசா மூலம் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இலங்கை திருகோணமலை பகுதியில் கடந்த 2012 ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை இலங்கை காவல் துறையில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து,

கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் தனது பணியை விருப்ப ஓய்வு கேட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில்,

விசா மூலம் தமிழகம் வந்த இலங்கையை சேர்ந்த தினேஷ் காந்த் என்பவர் தமிழகப் பகுதிகளில் உளவு பார்க்க வந்தாரா என்ற கோணத்தில் மத்திய புலனாய்வு துறையினர் 5 மணி நேரம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

பின்னர்,

அவர் முறையான ஆவணங்கள் வைத்துள்ளதை அடுத்து சந்தேகப்படும் படியாக வெளியிடங்களில் சுற்றக் கூடாது என்று அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *