ஆரம்பமானது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம்!!
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் (Department of Posts) தெரிவித்துள்ளது.
அதன்படி,
இன்று முதல் (27.10.2024) குறித்த உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க (Rajitha Ranasinghe) தெரிவித்துள்ளார்.
அதற்கமைய,
நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு (Colombo) மாவட்ட வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாததால், அந்த மாவட்டத்திற்கு இன்று விநியோகம் செய்யப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,
எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி விசேட விநியோக தினமாக அறிவிக்கப்பட்டு, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது