‘எஸ்.கே 20’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரிட்டிஷ் நடிகை “ஒலிவியா மோரிஸ்”!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஆர்ஆர்ஆர் பட நடிகை இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் டாக்டர்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ‘டான்’ மற்றும் ‘அயலான்’ படத்தில் நடித்து முடித்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகிறது.
இப்படத்தைத் தொடர்ந்து,
சிவகார்த்திகேயன் அடுத்தாக தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘எஸ்.கே 20’ என பெயரிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் ‘எஸ்.கே 20’ படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கியது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.
தற்போது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரிட்டிஷ் நடிகையான ஒலிவியா மோரிஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒலிவியா மோரிஸ் தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கியிருக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மேலும்.
இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.