ஒலிம்பிக் வீரர்களை வாழ்த்தி யுவன் இசையமைத்த பாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!!
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், ‘‘வென்று வா வீரர்களே’’ என்ற பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உருவாக்கி உள்ளார்.
மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், ‘வென்று வா வீரர்களே’ என்ற பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உருவாக்கி உள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் தமிழ்நாடு கூடைப் பந்தாட்டக் கழகம் தயாரித்துள்ள இந்த பாடலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பாடலை பார்வையிட இங்கே சொடக்குக
இந்நிகழ்வின்போது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஆதவ் அர்ஜூன் ஆகியோர் உடனிருந்தனர்.