அடுத்த மூன்று வாரங்களில் நாட்டில் ஆபத்து….. உபுல் ரோஹன!!
அடுத்த மூன்று வாரங்களின் பின்னர் நாட்டிற்குள் ஒமிக்ரோன் திரிபுடன் கூடிய கோவிட் தொற்று நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana) எச்சரித்துள்ளார்.
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் நடத்தைகள் மற்றும் தற்பாதுகாப்பு போன்றவற்றை ஆராயும் போது,
ஏற்கனவே ஒமிக்ரோன் தொற்றுக்கு உள்ளானவர்கள் நாட்டிற்குள் இருக்கக் கூடும் என்பது தெளிவு.
நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை குறித்து கவனம் செலுத்தி சுகாதார அதிகாரிகள் சட்டத்தை தளர்த்தியுள்ளனர். இது ஆபத்தான நிலைமை. நாட்டில் அதிகளவிலான நோயாளர்கள் தினமும் அடையாளம் காணப்படும் எண்ணிக்கை விட அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
புள்ளிவிபரங்கள் முற்றிலும் உண்மையான புள்ளிவிபரங்கள் இல்லை என்றே தெரிகின்றன. மரணங்களின் எண்ணிக்கை சம்பந்தமாக பாரதூரமான சிக்கல் நிலைமை உருவாகியுள்ளது.