தமது எதிர்காலம் மற்றும் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு நாட்டை விட்டு வெளியேறவுள்ள சுமார் ஒரு மில்லியன் இளைஞர்கள்!!
தமது எதிர்காலம் மற்றும் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு சுமார் ஒரு மில்லியன் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸநாயக்க(Mayantha Dissanayake) இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் 1983 ஆம் இடம்பெற்ற கலவரம் அல்லது மோதலின் போது கூட இவ்வளவு பாரிய தொகையானவர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த அபிவிருத்தி ஏமாற்றமளிப்பதாக தெரிவித்த அவர்,இளைஞர்களின் எதிர்காலத்திற்காக தற்போதைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அத்துடன் நாட்டின் வருங்கால சந்ததியினர் நாட்டை வளர்ப்பதில் மற்றும் தலைமையை வழங்குவதில் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.