ஒன்லைன் கல்விக்கு ஏற்ற ‘ஸ்மார்ட் போன்’ இல்லை – தவறான முடிவெடுத்த மாணவன் – சோகத்தில் குடும்பம்!!

ஒன்லைன் மூலம் நடத்தப்படும் கல்விச் செயற்பாட்டில் பங்குபற்றுவதற்கு ஏற்ற ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தால் வாரியபொல பகுதியில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வாரியபொல காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாரியபொல புறநகரில் உள்ள ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் கவிந்து தில்ஹான் கேஷரா விஜேரத்ன என்ற 10 ஆம் வகுப்பு மாணவனே கடந்த (16) ஆம் திகதி தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வாரியபொல பொலிசார் தெரிவித்தனர்.

கவிந்து குடும்பத்தின் இரண்டாவது பிள்ளை என வாரியபொல ஓ.ஐ.சி தலவத்த தெரிவித்தார். ஒன்லைன் கல்விக்குத் தேவையான மொபைல் போன் வசதிகள் இல்லாதது சிறுவனின் தற்கொலைக்கு காரணம் என தெரியவந்துள்ளதுடன், மரணம் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *