பொது இடங்களுக்கு பயணிப்பதற்கு கட்டாயமாக்கப்பட்டது தடுப்பூசி அட்டை!!

இலங்கையில், தடுப்பூசி அட்டை பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், 2022 ஜனவரி 1 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்கு பயணிப்பதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாரதர அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் பொது இடங்களுக்குச் செல்வதற்கு கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அண்மையில், சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலே சுகாதார அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

சுகாதார அமைச்சரின் Twitter பதிவையினை இங்கே Click செய்து பார்வையிடுங்கக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *