ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் நயன்தாரா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறாராம்.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் நயன்தாரா, இவர் கைவசம் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண் போன்ற படங்கள் உள்ளனர். இதில் மிலிந்த் ராவ் இயக்கும் நெற்றிக்கண் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. இதன் படப்பிடிப்பை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும் என ரஜினி திட்டமிட்டுள்ளதால், படக்குழுவினர் அனைவரும் ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளனர். நயன்தாராவும் இதற்காக ஐதராபாத் சென்றுள்ளார்.
அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பும் ஐதராபாத்தில் நடந்து வருவதால், அந்த படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறாராம். இந்த இரண்டு படங்களுக்கு ஒரே சமயத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளதால் நயன்தாரா இங்கும் அங்குமாக சென்று நடித்து வருகிறாராம்.