20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈபிள் கோபுர மின் விளக்குகள் இரவில் அணைக்கப்படும்….. பரிஸ் நிர்வாகம்!!
பிரான்சின் தலைநகரான பரிசில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தில் இரவு நேரத்தில் மின்விளக்குகள் ஒளிரும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈபிள் கோபுரத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அந்நாட்டு நேரப்படி 1.00 மணி வரை மட்டுமே ஒளிரும்.
அதன்பிறகு மின் விளக்குகள் அணைக்கப்படும்.
இந்நிலையில்,
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா,
ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்தி வைத்துள்ளதால் பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் மின்சார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மின்சாரத்தை சேமிக்கும் விதமாக ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகளை முன்கூட்டியே அணைக்க பரிஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி,
செப்டம்பர் 23 ஆம் திகதி முதல் ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் 11.45 மணியளவில் அணைக்கப்படும் என அந்த நகரின் மேயர் அன்னே ஹிடால்கோ தெரிவித்துள்ளார்.
அதேவேளை,
பரிசில் உள்ள பொதுகட்டிடங்களில் உள்ள மின் விளக்குகள் இரவு 10.00 மணியளவில் அணைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.