பிரபல ஆடைத் தொழிற்சாலையில் 400 பேருக்கு கொரோனா தொற்று!!
பாணந்துறையின் மோதரவில தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு பிரபலமான ஆடை தொழிற்சாலையில் 400 ஊழியர்கள் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை சுகாதார பரிசோதகர் (எம்ஓஎச்) தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலையில் சுமார் 2,000 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இவர்களில் 400 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பரிசோதகர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.