பாகிஸ்தானில் அடுத்த நபரும் அடித்து கொலை!!
குர்-ஆனிலுள்ள பக்கங்களை தீ வைத்ததாக தெரிவித்து, பாகிஸ்தானில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பஞ்ஜாப் – பானேவால் பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
காவல்துறையினாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட நபர் கடத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு கடத்தப்பட்ட நபர்,
லாகூரிலிருந்து சுமார் 275 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஒரு இடத்தில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவரின் சடலம், மரமொன்றில் தொங்கிய நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அன்னாரது இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றுள்ளன.
இந்த நபரை காப்பாற்ற முன்வராத காவல்துறை அதிகாரிகள் தொடர்பில், அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.