பல்கலை மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நிமித்தம் முற்றாக முடங்கிய நகரங்கள்!
யாழ்.பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தல் காரணமாக கிளிநொச்சி பிரதேசம் முற்றாக முடங்கியது.
கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன, அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுப்பட்டிருந்தன.
வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த போதும் மக்கள் இன்றி வெறுமையாக காணப்பட்டன. அத்தோடு இன்று பாடசாலைகள் நீண்ட இடைவெளிக்கு பின் ஆரம்பிக்கப்பட்ட போதும் மாணவர்களின் வரவு மிக மிக குறைவாக இருந்தமையால் பாடசாலைகளின் செயற்பாடுகளும் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.
இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால் ஒன்றினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிலையில் இன்று பளை நகரமும் முற்றாக முடங்கியுள்ளது.