பாகிஸ்தானில் பரியா புகையிரத விபத்து….. இதுவரை 15 பேர் உயிரிழப்பு – 50+ பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலைகளில்!!
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி பயணமாகிய ஹசாரா எக்ஸ்பிரஸ் என்ற தொடரூந்து தடம் புரண்டதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது புகையிரதத்தின் 10 பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் அருகினில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
திடீரென இடம்பெற்ற விபத்து காரணமாக, அந்தப் பாதையினூடான போக்குவரத்துகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இன்னும் சுமூகமான நிலை உருவாகவில்லை என்றும் புகையிரத கோட்ட கண்காணிப்பாளர் சுக்கூர் மஹ்மூதுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.