மற்றுமொரு நாடாளுமன்ற செய்தியாளருக்கும் கொரோனா
மற்றுமொரு நாடாளுமன்ற பெண் செய்தியாளர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கள நாளிதழொன்றின் நாடாளுமன்ற ஊடகவியலாளரே தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தேசிய கோவிட் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் ‘சண்டே ரைம்ஸ்’பத்திரிகையின் நாடாளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
முதல் நோயாளி அடையாளம் காணப்பட்ட பின்னர் அக்டோபர் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் இருந்த அனைத்து பத்திரிகையாளர்களும் சுய தனிமைப்படுத்தலை
மேற்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.