வாக்கெடுப்பு இல்லாமல் மிகைவரி சட்டமூலம் நிறைவேற்றம்!!
சிறிலங்கா நாடாளுமன்றில் மிகைவரி சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
வாக்கெடுப்பு இல்லாமல் மிகைவரி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
வருடாந்தம் 2000 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரே தடவையில் 25 சதவீத வரியை அறவிடும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து குறித்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தன.
இருப்பினும் மேலதிக வரிச் சட்டமூலத்தில் EPF, ETF உட்பட 13 நிதியங்கள் உள்ளடக்கப்படாத வகையில் திருத்தம் செய்யப்படும் என சட்டமா அதிபர் உறுதியளித்திருந்தார்.
இதனை அடுத்து மேலதிக வரிச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே,
அதன் மூன்றாம் வாசிப்பு இன்று நாடாளுமன்றில் நிகழ்த்தப்பட்டு, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.