திருமண நிகழ்வுகள், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், சினிமா அரங்குகள் நடத்த வழங்கப்பட்டது அனுமதி!!
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில், குறிப்பிட்ட சில சேவைகளை வழமை போன்று முன்னெடுக்க இன்று (24) முதல் அனுமதி வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல(Keheliya Rambukwella) தெரிவித்தார்.
Tweet ஐ பார்வையிட இங்கே சொடக்குங்கள்.
இதன்படி,திருமண நிகழ்வுகள், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், சினிமா அரங்குகள் மற்றும் முகாமைத்துவம் செய்து நடத்தும் நிகழ்வுகளை வழமை போன்று நடத்த இன்று முதல் அனுமதி வழங்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும்,
திறக்கப்படும் பகுதிகள் எந்த எல்லைக்குள் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அரசதலைவருடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டிகள் மற்றும் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றுமாறும் இல்லையெனில் இது தொடர்பாக மீண்டும் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.
கொவிட் அனர்த்தத்தின் போது நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கு நீண்ட கால திட்டமொன்றை மேற்கொள்ளுமாறும், இலாபத்திற்காக குறுகிய கால வேலைத்திட்டங்களை நாடாமல் இருக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்