மருந்துகளின் விலையை 20% உயர்த்த அனுமதி!!
மருந்துப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மருந்துகளின் விலையை 20% உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும்,
ஏற்கனவே விலை உயர்த்தப்பட்ட மருந்துகளுக்கு இந்த விலை உயர்வு பொருந்தாது என்று NMRA தெரிவித்துள்ளது.
இவ்வாறு நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாட்டின் சகல பகுதிகளிலும் ஆர்ப்பாடங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.