ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு மாணவர்கள் எழுதியுள்ள அவசர கடிதம்!!
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தங்களுக்கு நேரமின்மை காரணமாக அடுத்த ஆண்டு பெப்ரவரி வரை பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி 2021 உயர்தர மாணவர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
2020 ஆம் ஆண்டில் உலகளாவிய கொரோனா வைரஸ் உட்பட, கல்வியைப் பாதித்த எட்டு முக்கிய பிரச்சினைகளை இந்த கடிதம் எடுத்துக்காட்டுகிறது.
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு முன்னர் அனைத்து மாணவர்களும் அவர்களின் குடும்பங்களுக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாடத்திட்டத்தை உள்ளடக்க அதிக நேரம் தேவைப்படுவதால் நவம்பரில் பரீட்சையை நடத்துவது நடைமுறைக்கு ஏற்றது இல்லை என்றும், நவம்பரில் பரீட்சையை நடத்துவது மாணவர்களுக்கு அநீதியாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு தந்தை தன் குழந்தைகளைப் பற்றி நினைப்பது போல் நம்மை நினைப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர், கல்வி, வெளியுறவு, வெகுஜன ஊடகங்கள், தொழிலாளர், சுகாதாரம், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர், ஜனாதிபதி செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் ஜனாதிபதி ஊடக பிரிவின் தலைவர் ஆகியோருக்கும் இக்கடிதத்தின் பிரதிகள் அனுப்பப்பட்டுள்ளன.