யாழில் உரிய முறையில் அனுமதி பெற்றா வழிபாட்டிடங்கள் அமைக்கப்படுகின்றன….. “பண்ணை நாகபூசணி அம்மன்” தொடர்பில் தெரிவிக்கும் போது சி.வி.விக்னேஸ்வரன்!!
நாட்டில் உள்ள அனைவருக்கும் சட்டம் சமன்.
காவல்துறையினர் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.பண்ணைப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அம்மன் சிலை தொடர்பில் ஊடகங்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
யாழ்ப்பாணம், பண்ணையில் அமைந்துள்ள நாகபூசணி அம்மன் சிலை
உரிய அனுமதிகள் பெறாது அமைக்கப்பட்டதாக தெரிவித்து ஒருவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு,
பண்ணை நாகபூசணிக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு கொடுத்தவர் எவ்வளவு காலம் யாழ்ப்பாணத்தில் இருப்பாரோ தெரியவில்லை.
அவரது முறைப்பாட்டை காவல்துறையினர் ஏற்றது பிரச்சினை இல்லை.
இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் யாழ் மாவட்டத்தில் உரிய முறையில் அனுமதி பெற்றா வழிபாட்டு இடங்கள் அமைக்கப்படுகின்றன என்பதை காவல்துறையினரிடம் கேட்க விரும்புகிறேன்.
அவ்வாறு முறைப்பாடு வழங்கியவர் யார் என்பது இதுவரை வெளிவராத நிலையில் பெரும்பாலும் முறைப்பாட்டை வழங்கியவர் யாழ்ப்பாணத்தை விட்டு விரைவில் வெளியேறுவார் போல தெரிகிறது” என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.