கனடாவில் சிறிய ரக விமானம் விபத்து….. இருவர் பலி!!
கனடாவின் வடக்கு ஒன்ராறியோவில் இரண்டு பேருடன் கடந்த மாதம் மாயமான சிறிய விமானத்தின் சிதைவுகள் லேக் சுப்பீரியர் மாகாண பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து தொடர்பில் ஒன்ராறியோ பிராந்திய காவல்துறையினர் கருத்து தெரிவிக்கையில்,
மாயமான விமானம் தொடர்பில் தமது ஹெலிகொப்டர் ஒன்றும், பொதுமக்கள் பயன்படுத்தும் ஹெலிகொப்டர் ஒன்றும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் குறித்த சிதைவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அந்த விமானத்தில் பயணம் செய்த இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவர்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஆல்பர்ட்டா பகுதியில் வசிக்கும் இருவரது குடும்பத்தினருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விமானமானது ஏப்ரல் 14ஆம் திகதி ஒன்ராறியோவின் டெல்லி நகரிலிருந்து மராத்தான் பகுதிக்கு சென்றதாகவும், பின் ரெட் ராக் ஏரிக்கு அருகில் ரேடாரில் இருந்து காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.