230 பேருடன் திடீரென செங்குத்தாக கீழிறங்கிய விமானம் – 11 பேர் படுகாயம்….. முழுமையான விபரங்கள்!!

சுமார் 38000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்று திடீரென செங்குத்தாக கீழிறங்கியதால் பயணிகள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது,

கடந்த ஞாயிற்றுக்கிழமை(24/12/2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரீபியன் கடலில் அமைந்துள்ள பார்படாஸ் தீவிலிருந்து இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நோக்கி 225 பயணிகளுடன் புறப்பட்ட

ஏர்பஸ் விமானம்(Airbus Flight) ஒன்றே இவ்வாறு செங்குத்தாக கீழிறங்கியுள்ளது.

இந்நிலையில்,

காற்றில் ஏற்பட்ட திடீர் மாறுபாடு காரணமாகவே விமானம் திடீர் என கீழ் நோக்கி இறங்கியுள்ளது.

அதன் பின்னர்,

உடனடியாக விமானி விமானத்தை அருகிலுள்ள பெர்முடா தீவில் தரையிறக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் 11 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *