விஷம் குடித்த காதலர்கள், காதலன் பலி காதலி வைத்தியசாலையில்-காரணம் காதலுக்கு பெற்றோர் சம்மதமின்மை!!

யாழில் தமது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்காமையால் விபரீத முடிவெடுத்து மருந்து குடித்ததில் காதலன் உயிரிழந்துள்ளதுடன் காதலி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தெரியவருகின்றது.

மச்சான் மச்சாள் உறவுமுறைகொண்ட 19 வயது ஆணும் 17 வயதான பெண் ஒருவரும் காதலித்துவந்துள்ளனர். குடும்பப் பகைமை காரணமாக இருவரது காதலையும் பெற்றோர் ஏற்கவில்லை என கூறப்படுகின்றது.

இதனால் 19 வயதான குறித்த காதலன் மருந்து போத்தல் ஒன்றை வாங்கி அதில் அரைவாசியை தான் குடித்துவிட்டு மிகுதியை தனது காதலியான 17 வயது பெண்ணுக்கு குடிக்க கொடுத்துள்ளார்.

இதனையடுத்து மயக்கமடைந்த நிலையில் இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காதலன் நேற்று சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ள நிலையில் காதலி சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை நாட்டில் கொரோனாவிற்கு பலர் பலியாகிவரும் நிலையில் யாழில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறுகின்றமை குறித்து சமூக ஆர்வலர்கள் பரும் விசனக்களை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *