புத்தூர் பகுதியில் மணல் ஏற்றிவந்த டிப்பர் மீது போலீசார் துப்பாக்கி சூடு….. தடம்புரண்டதில் மூவர் படுகாயம்!!
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் ரக லொறி ஒன்று காங்கேசன்துறை போலீசாரின் சைகைகளுக்கு மதிப்பளிக்காதவகையில் வண்டியை நிறுத்தாமல் சென்றுள்ளது.
குறித்த டிப்பர் வாகனத்தை பின் தொடர்ந்து வந்த போலீசார் ஆள் நடமாட்டம் குறைவான புத்தூர் – சிறப்பிட்டி இடைப்பட்ட பகுதியில் வைத்து குறித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
குறித்த சம்பவத்தில் குறித்த டிப்பர் ரக வாகனமானது தடம் புரண்டு யாழ் – பருத்தித்துறை 750 வீதி மணல்கோலமாக காட்சியளிக்கிறது.
குறித்த சம்பவத்தில் வாகனத்தின் சாரதி மற்றும் அவருடன் பயணித்த இரு உதவியாளர்கள் ஆகியோர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
போலீசாரின் குறித்த செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் எதிர்மறையான தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.