பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்!!
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஃபர்ஹானா.
இதனை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.
முன்னதாக வெளியாகிய இப்பட Trailer இல் இஸ்லாமிய பெண்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தொடர்ந்து,
இஸ்லாமிய பெண்ணாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதற்கிடையில்,
மே 12-ம் தேதி திரைப்படம் திரைக்கு வந்தது.
மேலும்,
பலரது பாராட்டுக்களையும் பெற்றது.
இதனால்,
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒருதரப்பினர் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
அதனடிப்படையில்,
சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில் நான்கு காவலர்கள் பாதுகாப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அன்னையர் தினம் விருது வழங்கும் விழாவில்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பெயர் இடம்பெற்றிருந்தது.
ஆனால்,
அந்த நிகழ்வில் ஐஸ்வர்யா கலந்துக்கொள்ளாததால, அவரது தாய் நாகமணிக்கு வழங்கப்பட்டது.