காரில் இருந்து குடித்த பெண்கள் – தட்டி கேட்ட போலீஸ் அதிகாரி….. அடித்த அடியில் வைத்தியசாலையில் அனுமதி!!
கிரிகோரி வீதிக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (05/11/2023) நள்ளிரவு 12.00 மணியளவில் காரை நிறுத்தி மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படும் இரு பெண்களால் தாக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்கள் இருவரும் அதிக போதை காரணமாக பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கியுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொழும்பு 13 மற்றும் கொழும்பு 14 ஆகிய இடங்களில் வசிக்கும் 30 மற்றும் 43 வயதுடைய இரண்டு பெண்களே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கொழும்பு மாநகர போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அதிகாரி மேலும்,
பல பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.