கொரோனா சூழ்நிலையில் தபால் மா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்!!
நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் இன்று (13) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.
நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சில பகுதிகளில் கடிதங்கள் ஒன்று விட்ட ஒருநாள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அஞ்சல் அட்டைகளின் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.