தபால் ஊழியர்கள் 32 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்
தபால் ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கத்தின் தலைவர் சிந்தக பண்டார (Sindhaka Bandara) தெரிவித்துள்ளார்.
தபால் திணைக்களத்திற்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து 32 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை தபால் ஊழியர்கள் நடத்த தீர்மானித்துள்ளனர்.
இன்று மாலை 4 மணி தொடக்கம் நாளை நள்ளிரவு வரை வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும்,
பல தபால் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று காலை 10 மணிக்கு வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரை சந்தித்து தமது கவலைகள் குறித்து கலந்துரையாட உள்ளனர்.