இனிமேல் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு!!
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ வளாகத்திலுள்ள அனைத்து அனல் மின் நிலையங்களும் இன்று பிற்பகல் 05.00 மணியளவில் மூடப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம்
தெரிவித்துள்ளது.
களனிதிஸ்ஸ வளாகம் அமைப்பிலிருந்து அகற்றப்பட்டால் 300 மெகாவோட் திறன் இழக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளார்.
எனவே,
இன்று முதல் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.