பாரிய ஆபத்தினை எதிர்கொள்ள நேரிடும்!! பஹாமுனே ஸ்ரீ சுமங்கல தேரர் இடித்துரைப்பு!!
கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாடு தொடர்பில் வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றி அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும் என மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் பஹாமுனே ஸ்ரீ சுமங்கல தேரர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டை முடக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுவரும் நிலையில், அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து முழு உலகமும் மிகவும் பயங்கரமான சூழலில் காணப்படுகின்றது.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் மல்வத்து பீடம் உட்பட நாட்டின் ஏனைய பௌத்த தலைவர்களும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளோம்.
இத்தகைய ஆபத்தான சூழ்நிலை தொடருமாயின் மீண்டும் கொரோனா அதிகரித்து பாரிய ஆபத்தினை நாடும் மக்களும் எதிர்நோக்க வேண்டி வரும்.
ஆகவே வைத்தியர்களின் அறிவுரைக்கமைய கொரோனா தொற்றினை இல்லாதொழிப்பதற்கு உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.
கொரோனா எனும் கொடிய நோய் நாட்டில் இருந்தும் உலகத்திலிருந்தும் இல்லாது போக வேண்டும் என பிரார்த்திக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.