கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார் தொடர்பில் விசேட மருத்துவர்களின் பரிந்துரை
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
மகப்பேற்று வைத்தியர்கள் ஆய்வகத்தின் செயலாளர் விசேட வைத்தியர் சாமிந்த மாதொட இதனை தெரிவித்தார்.
கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மாருக்கும் தடுப்பூசி வழங்குவதற்கான ஆலோசனை விசேட வைத்தியர்களால் முன்வைக்கப்பட்டது.
இதற்கு அந்த குழு அனுமதி வழங்கியதுடன், இதற்கான திட்டம் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.