ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தை மறுபடியும் முற்றுகை!!
சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தை மக்கள் தற்போது முற்றுகையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு சென்ற மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்திய ஆர்ப்பாட்டத்தை போன்றே தற்போது ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சிறிய அளவிலான மக்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் வருகைத்தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.