கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திலும் வாயு கசிவு….. முஜிபுர் ரகுமான்!!
மிரிஹானவில் உள்ள அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திலும் வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இச்சம்பவம்,
நவம்பர் 26ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய எரிவாயு நிறுவனத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் ஜனாதிபதியின் இல்லத்திற்கு புதிய எரிவாயு தாங்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.