ரணிலின் வசமான 04 அமைச்சுக்களின் பொறுப்புகள்!!
நான்கு அமைச்சு பொறுப்புகளை தம்வசம் வைத்துக்கொள்ளும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய,
நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள், தொழில்நுட்பம், மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல், முதலீட்டு ஊக்குவிப்பு ஆகிய அமைச்சுக்கள் அதிபரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
பிரதமரின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.