நாளைய கதவடைப்புப் போராட்டம்….. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு!!
வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நாளைய தினம்(25/04/2023) இடம்பெறவுள்ள கதவடைப்புப் போராட்டத்திற்கு பூரண ஆதரவு தெரிவித்துள்ளது.
இன்று(24/04/2023) வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைமையத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே நாளை(25/04/2023) இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவை வழங்குவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
குறித்த கூட்டத்தில் வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் சி. சிவகரன்,
யாழ் பிராந்திய கூட்டு இணைக்கப்பட்ட பேருந்து நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதரன்,
முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நா. சற்குணராசா,
மன்னார் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பு. நாகரூபன்,
வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். ரி. ராஜேஸ்வரன்,
கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தி. கிருஷ்ணன் ரூபன்ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.