தமிழர் உரிமைப் போரில் உயிர்நீத்தோருக்கான நினைவேந்தலுக்கு….. பொருட்களை சேகரிக்க யாழ் பல்கலை மாணவர்களின் புதிய திட்டம்!!

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம்தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்ரிக்கப்படுவது வழமை.

அந்தவகையில்,

இவ்வாண்டும் மாவீரர் வார நாள் நிகழ்வுகளை தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசங்களும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,

மாவீரர் தினத்தில் தமிழ் மக்களின் கூட்டுணர்வையும் கூட்டுரிமையையும் வெளிப்படுத்தும் வகையில் நினைவேந்தலுக்கு தேவையான பொருட்களை சேகரிப்பதற்கான கூடம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.

நினைவேந்தலுக்கு தேவையான கற்பூரம், எண்ணெய், சுட்டி, திரி என்பவற்றை நவம்பர் 27 ஆம் திகதி வரை தினமும் திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சேகரிப்பு கூடத்தில் வழங்க முடியும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *