மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீடிப்பு!!
தற்போது நடைமுறையிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை குறித்த தடையை நீடிக்குமாறு சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் விடுமுறை நாட்கள் இருப்பதால், அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து கண்டிப்பாக சோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அரச அதிபர் உத்தரவிட்டுள்ளார்.