தன்னைத்தானே கலாய்த்துக் கொண்ட பிரியா பவானி சங்கர்!!
தமிழ் திரையுலகில் பல படங்களை கைவசம் வைத்து நடித்து வரும் பிரியா பவானி சங்கர், தன்னைத்தானே கலாய்த்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
`மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர்.
பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது இவர் இந்தியன் 2, பத்து தல, ருத்ரன் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஜிம்மில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் கயிற்றில் தலைகீழாக தொங்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவு செய்து இருக்கிறார்.
மேலும், அந்த புகைப்படங்களுக்கு ’ஹேய் நல்லா சர்க்கஸ் பண்ற மேன்’ என்று தன்னைத்தானே கலாய்த்து பதிவு செய்திருக்கிறார்.
Twitter பதிவை பார்வையிட இங்கே Cllick செய்க
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.