தற்கொலை செய்யப் போவதாக மிரட்டும் மீரா மிதுன் – காரணம் இவர்தானா??

நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

 

ட்விட்டர் பதிவை பார்வையிட இங்கே அழுத்துங்கள்

 

தன் முடிவுக்கு அஜித் ரவி என்பவர் தான் காரணம் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த 2 பக்க அறிக்கையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் அஜித் ரவியின் அமைப்பை விட்டு விலகினேன் என்றும் அந்த அமைப்புக்காக நான் வேலை செய்து, அழகிப் பட்டம் வென்றேன் எனவும் கூறியுள்ளார்.

அஜித் ரவி செய்த அநீதியால் அந்த அமைப்பை விட்டு விலகி என் சொந்த அமைப்பை உருவாக்கினேன். அஜித் ரவி என் பெயரை கெடுத்துவிட்டார். என் மீது போலி வழக்குகள் தொடர்ந்தார். சைபர் புல்லியிங் செய்தார். தன் அதிகாரம் மற்றும் பணத்தை வைத்து எனக்கு பிரச்சனைகள் கொடுத்தார் என அடுக்கடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

அவர் என்ன செய்தாலும் அதில் இருந்து நான் மீண்டு வந்தேன். அவர் என்னை பின்தொடர்கிறார், என் வேலையை கெடுக்கிறார், என் ப்ராஜெக்டுகள் ரிலீஸாவதை தடுக்கிறார், என் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்துகிறார். 3 ஆண்டுகளாக அவர் என்னை டார்ச்சர் செய்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் கிரிமினல்களை வைத்து கொடுமைப்படுத்துகிறார்.

அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது. ஆனால் யாருமே நடவடிக்கை எடுக்கவில்லை எடுக்காததால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என தெரிவித்துள்ளார். இதனை முதலமைச்சர், பிரதமருக்கு டேக் செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *