புள்ளிவிபரங்களில் அறிவிக்கப்படுவதை விட தினமும் அதிகமான தொற்றாளர்கள்….. உபுல் ரோஹன!!
கொவிட் தொற்று நோய் நிலைமை சம்பந்தமாக சுகாதார அமைச்சு தினமும் வெளியிடும் புள்ளிவிபரங்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
புள்ளிவிபரங்களில் அறிவிக்கப்படுவதை விட அதிகமான தொற்றாளர்கள் தினமும் சமூகத்திற்குள் அடையாளம் காணப்படுகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த தகவல்கள் தேசிய புள்ளிவிபரங்களுக்கு வரும் போது திரிபுப்படுத்தும் நிலைமையை காணக் கூடியதாக இருக்கின்றது.
இப்படி தொற்று நோய் நிலைமையை கட்டுப்படுத்துவது மிகவும் ஆபத்தாக மாறலாம்.
இவ்வாறான நிலைமையில்,
தொற்று நோய் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்ற தவறான எண்ணம் மக்களுக்குள் ஏற்பட்டுள்ளது.
இதன் பிரதிபலனாக மக்கள் கவனமின்றி, பாதுகாப்பற்ற வகையில் செயற்பட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களில் நாடு முழுவதும் இப்படியான நிலைமையை காணக் கூடியதாக இருந்தது.
இதன் காரணமாக எதிர்காலத்தில் மீண்டும் துரதிஷ்டவசமான நிலைமை ஏற்படலாம் எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.