பொது போக்குவரத்து சேவையை நிறுத்துங்கள்…. வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்!!
கொவிட் -19 தொற்றை கணிசமாக கட்டுப்படுத்தும் வரை பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படுவதை மேலும் ஒத்திவைக்க வேண்டும் என்று சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம்,விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்(Dr. Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது கொவிட் தொற்று மீண்டும் தலைதூக்க வழிவகுக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே, எதிர்காலத்தில் நாங்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.