அதிகரிக்கப்பட்டது பேருந்து கட்டணம்….. முழுமையான விபரங்கள்!!
புதிய பேருந்து கட்டண அதிகரிப்புக்கு அமைய,
17 ரூபாயாக காணப்பட்ட ஆகக்குறைந்த பேருந்து கட்டணம், 20 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று வெளியிட்டுள்ளது
இலங்கையில் தற்போது ஆகக்கூடிய பேருந்து கட்டணமாக 1,303 முதல் 1,498 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சடுதியாக ஏற்பட்ட எரிபொருளின் விலையேற்றம் காரணமாக பேருந்து கட்டணத்தினை அதிகரிக்குமாறு கோரியிருந்த நிலையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.