நெல்லியடி பகுதியில் தீக்கிரையாகிக்கொண்டிருக்கும் புடவையகம்!!
நெல்லியடி நாவலர்மடம் பகுதியில் உள்ள புடவையகம் ஒன்று தீப் பிடித்து தற்போது எரிந்து கொண்டிருக்கிறது.
வடமராட்சி நெல்லியடி– யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நாவலர் மடம் பகுதியில் அமைந்துள்ள “ஸ்கை பசன்”(Sky fashion) எனும் புடவைக் கடையே தீப்பிடித்து எரிகின்றது.
கடையின் பின் பகுதியில் ஏற்பட்ட தீயினால் தீ பரவிக்கொண்டுள்ளது.
நெல்லியடி பொலீஸார் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் உடைகள் அகற்றும் பணி ஈடுபட்டு வருகின்றது.
யாழ் மாநகர சபை தீயணைக்கும் பிரிவினரால் தீ கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது,
குறித்த கடைக்குப் பின்னால் உணவு சமைக்கும் ஏற்பாடுகள் நடைபெறுவதுடன்,
மின்சாரம் தடை ஏற்பட்டால் மின்சாரம் பெறுவதற்கு பெற்றோலும் இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடை குப்பைக்கு தீ வைத்துவிட்டு கடைக்கு முன்பாக வந்த வேளை பெற்றோல் கலனில் தீ ஏற்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது ஆரம்பகட்ட விசாரணைகளில் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.